மயிலாடுதுறை,செப். 3 –
மயிலாடுதுறையில் ஞானாம்பிகை கல்லூரி வாசலிருந்து கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் ஆகியோர் கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க மண்டல தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் பேரணியில் தீன் கல்லூரி, தருமபுர கல்லூரி, ஞானாம்பிகை கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்தானம் செய்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியில் முழக்கமிட்டனர்.
பேரணி மகாதான தெரு, பட்டமங்கல வீதி வழியாக சென்றது. நிகழ்ச்சியில் 300 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் லயன்ஸ் மோகன்ராஜ், வீராசாமி, மாவட்ட தலைவர் சுகுமாரன் மற்றும் லயன்ஸ் சங்க பொருப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



