ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28 –
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் இராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு “யாதுமானவள் 110” தலைப்பில் நடைபெற்றது. வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன் தலைமை வகித்தனர்.
துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க கவர்னர் காந்தி கிருஷ்ணன், மகளிர் மைய தலைவர் எம். கல்பனா வரவேற்று பேசினர். மேடை புகழ் உற்சாகப் பேச்சாளர் பேராசிரியர் முனைவர் ஜெயந்தாஸ்ரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மகளிர் முன்னேற்றம், வாழ்வில் தடைகளை எதிர்கொள்ளும் விதம் பற்றி பேசினார். ரோட்டரியன்கள் கார்த்திகேயன், செல்வ அழகி, விஜய குமாரி நன்றியுரை வழங்கி பேசினர். பேராசிரியர் து. கீதா, ஞா. ஜெனிதா விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.