திருப்பூர், ஜூலை 31 –
திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி கருவம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயராமன் எம்எல்ஏ தலைமையிலும் பகுதி கழகச் செயலாளர் மக்கள் சேவகர் சிவாளா தினேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திருப்பூர் சுற்றுப்பயணம் வருகை குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலிட பார்வையாளர் தாமோதரன் எம்எல்ஏ பூத் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் எம்எல்ஏ கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசாமி, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி,
பகுதி கழக செயலாளர் ஹரிஹர சுதன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட பனியன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் கண்ணப்பன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி, வட்ட கழக செயலாளர்கள் பால தண்டாயுதம், கந்தவேல், சிவசுப்பிரமணியம் செல்வராஜ், ரமேஷ், பகுதி கழக துணை செயலாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்த், வீரமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிலம்பரசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஹரிபிரசாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் மோகன் மற்றும் மாவட்ட, பகுதி, வார்டு, கழக நிர்வாகிகள், பூத் கிளை செயலாளர்கள், பாக நிலை முகவர்கள் (BLA-2), சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.