கருங்கல், ஆக. 7 –
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானா பகுதியில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி. கோபால் தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஒன்றிய கழக பொருளாளர் தங்கதுரை, வழக்கறிஞர் ஜெப ஜான், பைஜீ, வேலாயுதம், ஆசீர், அருள், பன்னீர், வைத்தியர் நெல்சன், மரிய டான்ஸ், ஜோனே வார்டு உறுப்பினர்கள் லாசர், சைன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனுலால் டோம் மற்றும் கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.