கோவை, ஜூலை 23 –
பொள்ளாச்சி சேரன் நகர் விளையாட்டு மைதானத்தில் நிப்பான் ரெட் பெல்ட் கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தற்காப்பு கலை தேர்வு நடைபெற்றது. மாணவ, மாணவியர்களுக்கு சண்டை பயிற்சி, கட்டா, தனித்திறன், சண்டை நுணுக்கங்கள் ஆகியவற்றை பரிசோதிக்கும் நடுவராக சென்சாய் சையது இப்ராஹிம் அவர்கள் செயல்பட்டார்.
பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ் அவர்கள் பதக்கங்கள் மற்றும் பெல்டினை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சேரன் நகர் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.