சுசீந்திரம், ஆக. 7 –
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தற்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், கலங்கரை விளக்கின் மேல் தளத்தில் உள்ள சுற்றுப்புற கைப்பிடி கம்பிகளில் அதிக இடைவெளி இருப்பதால் சிறு குழந்தைகள் உள்ளே புகுந்து மேலிருந்து கீழே விழுந்து உயிர் பலி ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
பலமுறை பார்வையாளர்கள் புகார் தெரிவித்தும் கலங்கரை விளக்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இடைவெளியாக உள்ள இடத்தை சரி செய்து உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.