நாகர்கோவில், ஜூலை 25 –
கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக்டோபர் 10 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு: பயணிகள் நெருக்கடியை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டிப்பு செய்துள்ளது. அந்த வகையில் ராயல் எண் 07230 ஐதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் புதன்கிழமைகளில் இயக்கப்படுவது ஆகஸ்ட் 13-ம் தேதியில் இருந்து அக்டோபர் 8ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 9 டிரிப்புகள் கூடுதலாக இயக்கப்படும்.
ரயில் எண் 07229 கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுவது ஆகஸ்ட் 15-ல் இருந்து அக்டோபர் 10 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 9 டிரிப்புகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு 24-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.