தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 19 –
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான சர்வதேச கருத்தரங்கமும் விருது வழங்கும் விழாவும் கன்னியாகுமரியில் நடந்தது. விழாவிற்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் தலைமை தாங்கினார். சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரோ பிரவீன் சிங் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டுரைகள் 10 புத்தகமாக எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சிறப்பு வல்லுனர்கள் புத்தகத்தை வெளியிட்டனர். விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கொச்சின் ஐ.சி.ஏ.ஆர் முதன்மை முன்னாள் தலைவர் ஏ.பி. லிப்டன் கலந்து கொண்டு பேராசிரியர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மல்டி ஸ்பெக்ட்ரம் ரூரல் ஸ்கில் டெவெலப்மென்ட் சோசியல் எஜுகேஷன் நிறுவனத் தலைவர் ஜோசப் ரரூபட் மற்றும் இடன்பெர்க் பல்கலைக்கழக பேராசிரியர் சாம்சங் டேவிட்சன், டாக்டர் ஏசிலின் சீலா, பேராசிரியர் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ஆர். தர்ம ரஜினி நன்றி கூறினார்.
பேராசிரியைகள் ஷீலா மற்றும் அபிலாஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறையும் இடன்பெர்க் பல்கலைக்கழகமும் கன்னியாகுமரி மாவட்டம் ரூரல் ஸ்கில் டெவெலப்மென்ட் அண்ட் சோசியல் எஜுகேஷன் அமைப்பினரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



