திருப்பத்தூர், ஆக. 20 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஷமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்திரவல்லி , திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினர். பட்டா மாற்றம், வகுப்பு சான்றிதழ், மருத்துவ காப்பீடு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் நாற்சக்கர வண்டி ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மட்றப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி அனைவரையும் வரவேற்றார். மேலும் நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குநர் மருத்துவர் உமா மகேஸ்வரி,
ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன், கந்திலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், துணை சேர்மேன் மோகன்குமார், வட்டாட்சியர் நவநீதம், வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம், பாலமுருகன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், மட்றப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலாளர் சதிஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். இம்முகாமில் 750 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பெற்றனர்.



