திருப்பத்தூர், ஆக. 8 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சு.பள்ளிப்பட்டு பஞ்சாயத்து அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் அருகே ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியானது கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பெரும்பாலான மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று சுகாதார நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக பெற்றுத் தந்தார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி திருமுருகன், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய பொருளாளர் சின்ராசு, கிளை செயலாளர்கள் தண்டபாணி, இளைஞரணி அமைப்பாளர் தாமரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் குமரன், ஒப்பந்ததாரர் நடராஜன், வெங்கடேசன், மாணவரணி துணை அமைப்பாளர் குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக பொறுப்பாளர்கள் மற்றும் வீட்டு வசதி வாரிய சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.