தருமபுரி, ஆகஸ்ட் 22 –
தருமபுரி மாவட்டம் நகராட்சிக்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடகத்தூர் கூட்ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார். கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி தாசில்தார் சவுக்கத் அலி, தருமபுரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காவேரி, மேற்கு ஒன்றிய கணக்க செயலாளர் பிரபு ராஜசேகர், சேட்டு மற்றும் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி 500க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த முகாமில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோட்டாட்சியர் காயத்ரி 100 பயனாளிகளின் மனுக்களைஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



