சென்னை, ஆகஸ்ட் 26 –
ஓ.பி.ஆர் நினைவு தொண்டு அறக்கட்டளை சார்பில் சுதந்திர இந்தியாவின் முதல் சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி.ஆர் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஜாஃபர்கான் பேட்டை கே.ஆர்.டி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஓ.பி.ஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கே.ஆர்.டி கேரியர் அகாடமியின் நிறுவனத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முனைவர் நந்த கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் இந்த நிகழ்வின் போது அறக்கட்டளையின் அறங்காவலர்கள், இளைஞர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் அப்பகுதியில் 100க்கும்
மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.



