திருப்பூர், செப். 16 –
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி 4வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 1ம் தேதி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கினார். இதில் பொதுமக்களை சந்தித்து தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதை விளக்கி அதனை எதிர்த்து தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டுள்ள ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைகிறீர்களா? எனக்கேட்டு அவர்கள் அனுமதியோடு உறுப்பினராக சேர்க்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகு தியில் 46,161 குடும்பங்கள், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 44,088 குடும்பங்கள் என கிழக்கு மாவட்டத்தில் 90 ஆயிரத்து 249 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 34 ஆயிரத்து 842 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் 45, 021 குடும்பங்கள், மடத்துக்குளத்தில் 46,488 குடும்பங்கள் என 91,509 குடும்பங் களை சேர்ந்த 2 லட்சத்து 25 ஆயிரத்து 815 பேர் என 1.81 லட்சம் குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 50 சதவீதம் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் உறுப்பினர்களாக சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இணைய தயாராக இருக்கின்றனர்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இரண்டாம் கட்டமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும் தமிழ் நாட்டை காக்கும் வகையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் உறுதிமொழியை முன்மொழியும் கூட்டம் நடைபெறுகிறது.



