தென்காசி, ஜூலை 7 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி சங்கரன்கோவில் நகரம் 20-வது வார்டு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தின் சார்பில் மக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓரணியில் மக்களை இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் முன்னிலை வகித்தனர். இதில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து திராவிட மாடல் அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி மேற்கு நகர செயலாளர் அந்தோணிசாமி, மாவட்ட பிரதிநிதிகள் செய்யது அலி, முத்துக்குமார், டைட்டஸ் ஆதித்தன், நகரத் துணை செயலாளர் சுப்புத்தாய் , தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் சுற்றுச்சூழல் அணி ஜலால், இளைஞர் அணி அன்சாரி, சிறுபான்மையினர் அணி அப்துல் ரகுமான், மாணவரணி வெங்கடேஷ் மாணவரணி வீரமணி, தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி, நகர இளைஞரணி சதீஷ், ஜான்சன், நகர சிறுபான்மையினர் அணி ஜிந்தா மைதீன், வர்த்தகர் அணி ரகுமான், திமுக மூத்த உறுப்பினர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.