கோவை, செப். 17 –
கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், ஒட்டர் பாளையம் ஆகிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு மே.கிணறு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்” நடைபெற்றது. முகாமை அன்னூர் வட்டாட்சியர் யமுனா, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ந. பழனிச்சாமி, அன்னூர் பேரூராட்சி தலைவர் இரா. பரமேஸ்வரன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்.என்.கே. செந்தில் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் மனுவை பெற்று துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வில் துணை வட்டாட்சியர் தெய்வ பாண்டியம்மாள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மகேஸ்வரி, யமுனாதேவி, விஜயலட்சுமி, சிவக்குமார், நவீன், ஊராட்சி செயலர் அருண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். உடன் திமுக நிர்வாகிகள் மனோகர், சண்முக வேலாயுதம், ஆனந்தகுமார், வரதராஜ், மகாலிங்கம் இருந்தனர். இந்த முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.



