தருமபுரி, ஆகஸ்ட் 03 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அரசின் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு 300 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழக பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள், நாதஸ்வரம் கச்சேரி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்ப சேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, நகரச் செயலாளர் நாட்டான் மாது மற்றும் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறையின் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.