கன்னியாகுமரி, செப். 27 –
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் இனியா நகரில் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்காக மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற உதவிகள் வாழ்வாதாரத்துக்கு இயன்ற வரை உதவும் நோக்கில் மறைந்த தந்தையின் பெயரில் மகன்களின் கூட்டு முயற்ச்சியால் எஸ்.எம்.ஏ. பவுண்டேஷன் இன்று அதன் நிர்வாக இயக்குனர் ஜிஸ்தி தலைமையில் மறைந்த எஸ்.எம்.ஏ. ஹாஜி அப்துல் காதரின் மனைவி சுபைதா ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பவுண்டேஷன் இயக்குனர் அர்ஷ் நவாஸ், மேலாளர் தவ்பீக் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பளாராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆர். எம்.ஓ மருத்துவர் விஜயலட்சுமி, ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஏ.ஆர்.எம். ஓ மருத்துவர் ரினிமோள், ஆசாரிபள்ளம் உதவி பேராசிரியர் மருத்துவர் ராசிப்கான், தேங்காய் பட்டணம் எஸ்.ஆர் மருத்துவமனை மருத்துவர் ராபின் மோசஸ், புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன், இனயம் முஸ்லிம் ஜமாத் தலைவர் முஹம்மது அப்துல் காதர், இனிய நகர் முஸ்லிம் ஜமாத் தலைவர் பசீர், ஜாக் அமைப்பின் நிறுவனர் மௌலவி கமாலுதீன் மதனி, ஒய்.எம்.ஜே குமரி ஜமாத் தாவா குழு அப்துல் ஹமீது மஹ்லரி, ஒய்.எம்.ஜே. மாவட்ட தலைவர் அப்துல் றகுமான், இனயம் பங்குத் தந்தை பாபியான்ஸ், ஹெலன் நகர் பங்குத்தந்தை ஜான் போஸ்கோ, இனயம் புனித ஹெலனாள் உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியை மேரி கீதா உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



