ஈரோடு, ஜூலை 1 –
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம் நாளை (புதன்கிழமை) முதல் 4 ந் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. பிறகு மகா சுதர்சன ஹோமம் தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
4 ந் தேதி கும்ப ஆராதனை சுதர்சன ஹோமம் பூர்த்தி கலச புறப்பாடு அன்று மாலை வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வழக்குகளில் வெற்றி பெறவும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் நினைத்தது நிறைவேறவும் நோய்கள் நீங்கவும் எதிரிகளின் சூழ்ச்சி சதித்திட்டங்களில் இருந்து காக்கவும் வறுமை ஒழியவும் இந்த சுதர்சன ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சுகுமார், செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் பட்டாச்சார்யர்கள் செய்து வருகின்றனர்.