எட்டையபுரம், ஜூலை 02 –
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் “வாட்டர் பெல் திட்டம்” தொடங்கப்பட்டது. எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி பள்ளி வேலை நாட்களில் காலை 11 மணி, பிற்பகல் 1 மணி மற்றும் மாலை 3 மணி என மணி ஒலிக்கப்பட்டு மாணவர்களுக்குத் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் தண்ணீர் பருகுவதின் முக்கியத்துவத்தையும் பள்ளி தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் மற்றும் இடைநிலை ஆசிரியர் இந்திரா எடுத்துரைத்தார்.