போகலூர், ஜுலை 22 –
அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கையுடன் இரண்டாம் கட்ட எழுச்சி சுற்று பயணம் சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பளிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், Ex.MLA முன்னிலையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
கழக அம்மா பேரவை துணை செயலாளர் முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி. ரெத்தினம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருணாகரன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் கவிஞர் இராமநாதன், நாட்டுக்கோட்டை ஜெயா கார்த்திகேயன், வினோத் மற்றும்
ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பூத் கமிட்டி செயலாளர்கள், பூத் கமிட்டி முகவர்கள் (PLA) மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கொண்டனர். மாற்று கட்சி சேர்ந்த 50 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.