விழுப்புரம், ஜூலை 14 –
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கான சாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கான ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் 11.07.2025 அன்று தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்களை வழங்கினார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு தலா ரூ. 8,85,813/- லட்சம் வீதம் ரூ. 44,29,065/- லட்சம் மதிப்பீட்டில் 5 வாகனங்கள் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி இயக்குனர் (தணிக்கை), மாவட்ட ஊராட்சி செயலர், வானூர் உதவி செயற்பொறியாளர் ஆகிய அலுவலர்களின் ஓட்டுநர்களிடம் வாகனத்திற்கான சாவிகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி இயக்குனர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவ ஞானசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தணிக்கை) ரத்தினமாலா, மாவட்ட ஊராட்சி செயலர் நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கடந்து கொண்டனர்.