கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 3 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மாவீரன் சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட அவரின் திரு உருவ படத்திற்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திரி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தர்மபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கொங்கு வெள்ளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் தலைவர் வே. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கொங்கு நாடு மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வஜ்ஜரவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை இளையராஜா ஆகியோர் மற்றும் இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கதிரவன், கிருஷ்ணகிரி மாவட்ட கொங்கு வேளாளர்கள் கவுண்டர் சங்கத்தின் தலைவர் பிரகாசம், சங்கத்தின் செயலாளரும் முன்னாள் வீராச்சிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவருமான ராதாகிருஷ்ணன், ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் பா. அமானுல்லா, வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மூன்றம்பட்டி எஸ். குமரேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத் தலைவர் தணிகை குமரன், பேரூராட்சி கவுன்சிலர் சுமித்ரா தவமணி மற்றும் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.