ஈரோடு மே 17
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தியது 109 டிகிரி வரை வெயில் அடித்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர் இதனால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டனர் இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது இப்பவே இப்படி வெயில் கொளுத்துகிறதே அக்னி வெயிலில் என்ன பாடுபட போகிறோமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர்
இந்த நிலையில் இப்போது ஈரோடு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது ஈரோட்டில் நேற்று மாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது விட்டுவிட்டு பெய்த இந்த மாலை இரவு 10 மணி வரை நீடித்தது தொடர்ந்து விடிய விடிய மழை தூறிக் கொண்டே இருந்தது இதனால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியை அனுபவித்தனர்