ஈரோடு, ஜூலை 22 –
இயற்கை ஆர்வலர் பேராசிரியர் கந்தசாமி எழுதிய காடு எனது கனவு தேசம் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா ஈரோடு வேளாளர் கல்லூரி வளாகத்தில் நடந்தது. வக்கீல் பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்று பேசினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினார். முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். இதை கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார் .
இந்த நிகழ்ச்சியில் பாரதி வித்யா பவன் சேர்மன் டாக்டர் எல்.எம். ராமகிருஷ்ணன், ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சந்திரசேகர், யூ.ஆர்.சி நிறுவன நிர்வாக இயக்குனர் தேவராஜன், வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி சேர்மன் குணசேகரன், அகஸ்தியா அகாடமி நிர்வாக டிரஸ்டி வித்யா செந்தில் அசோக், டிராவல்ஸ் இயக்குனர் ரத்னா வர்ஷினி மற்றும் ஆடிட்டர் கதிர் வேல் ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.