ஈரோடு, ஜூலை 25 –
ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசு சலுகைகளை வழங்கினார். இம்முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித்ஜெயின், ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம்,
துணை மேயர் செல்வராஜ், இரண்டாவது மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் ஜெகதீஷ், ஜெகநாதன், ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சம்பந்தமாக மனுக்கள் கொடுத்தனர். மகளிர் உதவி தொகைக்கு ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை கொடுத்தனர்.