ஈரோடு, ஆக. 9 –
ஈரோடு திண்டலில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. அப்போது விஇடி கல்லூரியில் படிக்கும் 1660 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைத்தறித் துறையை பிரபலப்படுத்துவதற்காக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இராட்டை வடிவத்தில் கல்லூரி மைதானத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் நின்று சாதனை படைத்தனர்.
கைத்தறி மற்றும் அதன் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய கைத்தறி தினத்தன்று இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் வறுமையை ஒழித்தல், நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை அடைதல், தரமான கல்வி, பாலின சமத்துவம், ஒழுக்கமான வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி, பயன்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவை குறித்து ஐ.நா.வின் 17 இலக்குகளில் சில இளைஞர்கள் மூலம் கைத்தறித் துறையைப் பாதுகாப்பது அந்த நோக்கத்தை அடையும் மற்றும் அதன் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும்.
தாளாளர் சந்திரசேகர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் வி.பி. நல்லசாமி, டீன் டாக்டர் எஸ். லோகேஷ் குமார் வரவேற்றனர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கே.கே. வினோத், தேசிய நடுவர் ஜனனி ஸ்ரீ, மாநில நடுவர் ஆனந்த முருகன் மற்றும் கைத்தறி உதவி இயக்குநர் சரவணன் ஆகியோர் இதில் சிறப்புரையாற்றினர். சிடிஎப் தொழில்நுட்பத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் அரசு கைத்தறித் துறை கல்லூரியில் 2 நாள் சிறப்பு கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது.