ஈரோடு, 22.08.2026
ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ப. ஜெகதீசன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஈரோடு நகரில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, செப்டம்பர் 17ஆம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 20ஆம் தேதி வரை ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு, ஊர்வலப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் க. கார்த்தி, மாவட்டச் செயலாளர்கள் சங்கர், கார்த்திகேயன், முரளி, ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



