ஈரோடு, ஜன. 29 –
எஸ் கே எம் நிறுவனங்களின் தலைவரும் உலக சமுதாய சேவா சங்க தலைவருமான சமூக ஆர்வலர் டாக்டர் எஸ் கே எம் மயிலானந்தன். 2013ம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரியவிருதான பத்ம ஸ்ரீ விருது இவராற்றியசமூகபணிகளுக்காக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் 1945 ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்த மயிலானந்தன் தனது பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார். அவர் 1983ம் ஆண்டில் கோழிப்பண்ணையாளர்கள் நலச் சங்கத்தைத் தொடங்கி அதன் நிறுவனத் தலைவரானார். கோழிநண்பன் என்ற கோழிவளர்ப்பு குறித்த மாத இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் ஆனார். குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் முட்டையையும் கொண்டுவந்ததில் அவர் முக்கிய பங்குவகித்தார் மயிலானந்தன்.
ஈரோடுமாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இந்த மையத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமபஞ்சாயத்துகளில் துணை மையங்களும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் மன்றங்களும் உள்ளன. இந்தமையம் நுகர்வோரின் பயன்பாட்டிற்காக“குடிமக்கள் சாசனம்”குறித்த புத்தகம் வெளியிட்டுள்ளது. ஈரோடுபாதுகாப்புமையம் ஆற்றியசேவைகளைபாராட்டி இந்தியஅரசு 1993ம் ஆண்டு“தேசிய சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு மையம்”விருது மற்றும் ரூ.50000 பரிசுத்தொகையையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



