ஈரோடு, நவம்பர் 10 –
வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம் இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ஆரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூர்ய பிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் .
ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தல் ஆணையம் என்று எழுதப்பட்ட சவப் பெட்டியுடன் வந்த இளைஞர் காங்கிரசார் திடீர் என்று நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ஈ பி ரவி மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட செயலாளர் கோபி, முன்னாள் கவுன்சிலர் சாம்ராட் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


