சிவகங்கை, ஆகஸ்ட் 6 –
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இளையான்குடி சாலை கல்குளம் பிரிவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் (திட்டங்கள் அலகு, மதுரை) சார்பில் ரூ.96.05 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பகுதி – II அமைப்பதற்கான பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்து வரைபடத்தினை பார்வையிட்டார்.
உடன் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள், மதுரை) ஆர்.கே.ரமேஷ், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம். துரைஆனந்த், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள், மதுரை) எம். மோகனகாந்தி, உதவி கோட்டப்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர், ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரம் (நாட்ச் இந்தியா பிரைவேட் லிமிடெட்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.