தேனி மாவட்டம், மே – 7
தேனி மாவட்டம், உத்தமபாளையம் புனித ஜோசப் ஆரம்பபள்ளியில் மகாத்மா நுகர்வோர் உரிமைகள் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை LR இன்ஸ்ட்ரூ மெண்ட் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வை உத்தமபாளையம் புனித விண்ணரசி தேவாலய பங்குத்தந்தை அந்தோணிராசு அவர்கள் தொடங்கி வைத்தார் இதனை தொடர்ந்து மகாத்மா நுகர்வோர் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் சிவசங்கரன் தேனி மாவட்ட தலைவர் லூயிஸ் மற்றும் உத்தமபாளையம் நகர தலைவர் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினர் மேலும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்



