திருப்பூர், ஜுலை 15 –
திருப்பூர் கல்லூரி சாலையில் இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் மாநில அமைப்பாளர் மாவீரன் பூண்டி சுபாஷ் முன்னிலையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பெருந்தலைவர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் அப்பகுதியில் இந்து முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை நிறுவனர் வழக்கறிஞர் கோபிநாத் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் அன்னதானம் பெற்று வாழ்த்தி சென்றனர்.