திண்டுக்கல், ஜூலை 15 –
திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் இளைய வேந்தர்
P. ரவி பச்சமுத்து பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம், பிறந்தநாள் கேக் வெட்டியும் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியில் திருநங்கைகள் இணைப்பு விழா நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக திருநங்கைகள் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திரைத்துறை மற்றும் நாடகத்துறை மாநில துணைச் செயலாளர் G.T. ரவி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற பொறுப்பாளர் A. ஜோஸ்வா முன்னிலை வகித்தார். மாவட்ட இணை தலைவர் முனைவர் அ. பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் C. ரஞ்சித்குமார் ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் போது இந்திய ஜனநாயக கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் இளைய வேந்தர் P. ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது ஏராளமான திருநங்கைகள் இந்திய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பரமசிவம், கருணாகரன், லக்னக்குமார், இணைத் தலைவர் செல்வராஜ், பழனி சட்டமன்ற மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா, திண்டுக்கல் மகளிர் அணி செயலாளர் உமாதேவி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சனி நன்றி கூறினார்.