பூதப்பாண்டி, ஜுலை 25 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டுவிளையை அடுத்துள்ள மார்த்தால் பகுதியில் சுமார் 600க்கும் மேல் ரேசன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் மாதம் தோறும் திட்டு விளை பகுதியிலுள்ள ரேசன் கடையில் சென்று தான் பொருட்கள் வாங்கி கொண்டு வருகிறார்கள். அந்த பொதுமக்களின் வசதிக்காக ஒரு பகுதி நேர ரேசன் கடை மார்த்தால் பகுதியில் அமைத்து தர வேண்டும் என்றும் அதற்கு மார்த்தால் பகுதியில் செல்லும் அனந்தநார் சானல் பராமரிக்கும் வாட்சர்க்காக சானல் கரையோரமாக ஒரு தங்கும் அறை அரசால் கட்டி கொடுக்கப்பட்டது. அது தற்போது சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாட்சரும் இல்லாமல் அந்த கட்டிடம் எந்த உபயோகமும் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதியும் அரசு கட்டிடம் பாழவதை தடுத்து அந்த கட்டிடத்தை புதுப்பித்து அதில் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர் மரிய அற்புதம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.