நாகர்கோவில், ஆகஸ்ட் 18 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 21ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடக்கிறது.
கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து ஜூலை 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும்.
கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



