பூதப்பாண்டி, டிசம்பர் 20 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள துவரங்காட்டில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் பின்புறம் உள்ள அய்யன் குழிகுளத்தின் கிழக்கு கரையோரமாக ஏதோ மிதப்பது போல் நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் அந்த பகுதியில் நின்றவர்கள் பார்த்தனர். உடனே அருகில் சென்று பார்க்கும் போது மனிதனுடைய தலை தெரிந்தது.
உடனே பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாசிற்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் குளத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் கிடந்த உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் அடித்தது.
இறந்து சுமார் நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் எனவும் 40 வயதுள்ள ஆண் பிணம் என்றும் தண்ணீரில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக எந்த ஊரை சார்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


