திருவள்ளூர், ஜூலை 9 –
திருவள்ளூர் மாவட்டம் , வானகரம் கங்கை அம்மன் கோயில் தெரு பாண்டியபுரம் பிரிக் ஹவுஸ் அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் ஜீரணேத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவேற்காடு திமுக நகர செயலாளரும் திருவேற்காடு நகராட்சி நகர மன்ற தலைவருமான என்.இ.கே. மூர்த்தி மற்றும் கோயில் நிர்வாகிகள் சிவசங்கர், வினோத், நந்தகுமார், கார்த்திக், நவீன், பாலசுப்பிரமணி, அப்பு சுப்பிரமணியன், பார்த்திபன் மற்றும் கோயில் சபதி பிரகாஷ் சர்மா உள்ளிட்ட விழா குழுவினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கலசம், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.