இராமேஸ்வரம், ஜூலை 28 –
ராமேஸ்வரம் பேக்கரும்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜமாத்தார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் துவா செய்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ராமேஸ்வரம் அடுத்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் கலாம் குடும்பத்தார்கள் பள்ளிவாசல் ஆலிம்சாக்களை கொண்டு நினைவிடத்தில் துவா செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜெயினுள்ளாபுதின் நஜிமா மரைக்காயர் ஷேக் தாவூத் சேக் சலீம் பாஜக சிறுபான்மை பிரிவு வேலூர் இப்ராஹிம் தொண்டு அமைப்பினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.