By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
சிவகங்கை

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்

Last updated: June 25, 2025 6:41 pm
June 25, 2025
55 Views
Share
SHARE

சிவகங்கை, ஜூன் 25 –

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தேசியத்தலைவர் இராஜேந்திரன் ஆலோசனையின்படி சிவகங்கை மாவட்ட முதற்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கூட்டத்தில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து உறுப்பினர்கள் அறிமுகம் நடைபெற்றது. சங்கத்தின் தேவை என்ன, சங்கம் ஏன் தொடங்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தை மாவட்ட செயலாளர் ரவி விளக்கிக்கூறினார். மாவட்டப் பொருளாளர் ஏகநாதன் வரவு – செலவு அறிக்கை வாசித்தார்.

அதனைத்தொடர்ந்து தேசியத்தலைவர் இராஜேந்திரன் தலைமையில் சங்கத்தின் முந்தைய செயற்பாடுகளையும் சாதனைகளையும் சேவைகளையும் தற்போதைய தேவைகளையும் வருங்கால நோக்கங்களையும் எடுத்துரைத்த மாநில துணைத்தலைவர் முத்தமிழ் அரசன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து சங்கத்தின் உடனடி நோக்கங்களை 6 தீர்மானங்களாக மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் விரித்துரைத்தார். தீர்மானங்கள் ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கரவொலியெழுப்பி ஒப்புதல் அளித்தனர்.

தீர்மானம்-1: தேர்தல்கால வாக்குறுதிப்படி, தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், பல்வேறு இனங்களின் அடிப்படையில், சிறந்த பலன்கள் கிடைக்கும் வகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட்டதற்கு அவரைப் பாராட்டி தீர்மானம் ஏகமனதுடன் நிறைவேற்றப்பெறுகிறது.  

தீர்மானம்-2: தற்பொழுது வழங்கப்பட்டுவரும் இலவச பேருந்து பயண அட்டை வட்டார மற்றும் தொகுதி உள்ளிட்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் செல்லும்வண்ணம் வழங்கிடவேண்டி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெறுகிறது.

தீர்மானம்-3: நலவாரிய அட்டை வழங்காதவர்களுக்கு உடனடியாக நலவாரிய அட்டை வழங்கிடவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய சலுகைகளை உரியவர்களுக்கு வழங்கிடவும் காலமுறை இதழ் பத்திரிக்கையாளர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும் ஆவன செய்யவேண்டும் என்ற தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பெறுகிறது.

தீர்மானம்-4: தற்பொழுது வழங்கப்பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.12,000 என்பதை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் அதேபோல் குடும்ப ஓய்வூதியம் ரூ.6000 என்பதை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்கிடவும் அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்திடவும்வேண்டி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெறுகிறது

தீர்மானம்-5: அரசு விதிகளுக்குட்பட்டு அரசு வழிகாட்டு மதிப்பீட்டினடிப்படையில் (Government Guideline Value) வழங்கப்பெற்ற வீட்டுமனையினைப் பெறாமல் விடுபட்டுபோன பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் 3 சென்ட் இடம் உரிய விதிகளின்படி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடங்களில் அல்லது அதன் அருகில் உடனடியாக வழங்கிடவேண்டியும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெறுகிறது.

தீர்மானம்-6: பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தினை உடனே இயற்றி பத்திரிக்கைத் துறையினரை பாதுகாக்கவேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பெற்றது.

மேற்கூறிய தீர்மானத்தின்மீதான கருத்துக்களை துணைத்தலைவர் திருமாறன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர். மேற்கண்ட தீர்மானங்களை துறைசார் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர், துறை அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு அஞ்சல்மூலம் அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வின் நிறைவில் துணைச் செயலாளர் முத்து நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
சிவகங்கையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு; உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை
சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

மதுரை மாவட்டம் வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் சிலைப்பேட கல்வெட்டு உடைப்பு: காவல்துறை துணை ஆணையரிடம் மனு

July 10, 2026
16 Views
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை
திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் விழா நாளை துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account