வேலூர், ஆகஸ்ட் 25
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மதன் குரூப்ஸ் சார்பில் மாபெரும் 7S கால்பந்து போட்டி வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. கால்பந்து போட்டியை மதன் குரூப்ஸ் தலைவரும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளருமான ஏ.எம். மதன் மோகன் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்து விளையாட்டு குழுவினர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூபாய் 50,000 இரண்டாவது பரிசாக ரூபாய் 30,000 மூன்றாவது பரிசாக ரூபாய் 20000 நான்காம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் மற்றும் ஐந்து, ஆறு, ஏழு எட்டாவது பரிசாக தலா 3000 என மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 22,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.



