போகலூர், ஜுலை 8 –
ராமநாதபுரம் பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார் அதிமுக மாவட்ட கழக இணை செயலாளர் வழக்கறிஞர் கவிதா இல்ல திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் நல்லாசியுடன் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு அதிமுக முன்னாள் மாவட்ட அவை தலைவர் முருகேசன் அன்னக்கிளி நாச்சியார் மகன் வழி பேரனும் ராமநாதபுரம் மறவர் தெரு பொறியாளர் நாராயணசாமி கமலாதேவி மகள் வழி பேரனும் பாலாஜி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார். அதிமுக மாவட்டக் கழக இணைச் செயலாளர் ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கவிதா இவர்களது மகன் பாலாஜி குரூப் ஆஃப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் பொறியாளர் ஹர்ஷத் நாராயணன் என்ற மணமகனுக்கும் தேனி மாவட்டம் உப்பார்பட்டி துரைசாமி பார்வதி அம்மாள் மகன் வழி பேத்தியும் திருப்புவனம் கணக்கன்குடி நல்லுட்டியான் பெரியம்மாள் மகள் வழி பேத்தியும் மருதநாயகம் என்ற ராஜா ஜெயசுந்தரி இவர்களது மகள் பொறியாளர் சௌமியா என்ற மணமகளுக்கும் திருமணம் இன்று காலை ராமநாதபுரம் கேணிக்கரை யாபா மஹாலில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி மகளிர் அணி இணைச் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ராமநாதபுரம் சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், நான்காம் தமிழ்ச் சங்கம் தலைவர் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தினர். அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்திார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், பிரபல தொழிலதிபர் வேலு மனோகரன், அதிமுக கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகரன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் R.G. ரத்தினம் கழக மாணவரணி துணைச் செயலாளர் செந்தில்குமார் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.G. மருது பாண்டியன் ராமநாதபுரம் நகர் கழகச் செயலாளர் பால்பாண்டியன், பரமக்குடி நகர் கழகச் செயலாளர் வின்சென்ட் ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக பாலாஜி குரூப் ஆஃப் கம்பெனி உரிமையாளர் சசிகுமார், அதிமுக மாவட்ட இணைச்செயலாளர் ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கவிதா ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.