மயிலாடுதுறை, ஜூலை 24 –
மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே. மருது வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கோசி மதி. திருமாவளவன், எம்.எஸ். விஜய், வினோத் பாண்டியன், ஜெ. ஜுபையர் அகமது, செள. சர்வேதயன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளரும், தாட்கோ தலைவர் என். இளையராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மகன் மு.க. முத்து மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து திமுக இளைஞர் அணியின் 46-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு கொண்டாடினர்.
இக்கூட்டத்தில் நகரக் கழக செயலாளர்கள் குண்டாமணி (எ) என். செல்வராஜ், ம. சுப்பராயன், ஒன்றிய கழக செயலாளர்கள் எம். அப்துல்மாலிக், செல்ல சேது ரவிக்குமார், திருமாவளவன், ஏ.ஜி.ஜெ. பிரபாகர், ஏ.ஆர். ராஜா, அமிர்த விஜயகுமார், குமரா வைத்தியநாதன், ப. முருகமணி, பேரூர் செயலாளர்கள் எம். சம்சுதீன், அண்ணாதுரை, எம். அன்புச்செழியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.