வேலூர், ஜூன் 28 –
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, கங்கநல்லூர் ஊராட்சி, சந்தைமேடு அருகே ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயம், அலுவலகம், நூலகம், கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு, 30அடி உயர திமுக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றுதல் மற்றும் நூலகம் திறப்பு விழா பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சி கங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளருமான நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலைஞரின் நெருங்கிய தோழரும், மக்கள் செல்வந்தர் மண்ணின் மைந்தர், பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, துணை மேயர் சுனில்குமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா புஷ்பலதா, பி.ஜி. காட்பாடி ஆனந்தன், டீட்டா சரவணன் மற்றும் காட்பாடி நிர்வாகிகள், வேலூர் திமுக ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள், அணைக்கட்டு திமுக நிர்வாகிகள், ஏரிப்புதூர் வெங்கடேசன், சி. பாஸ்கரன், இலவம்பாடி தாய்வழி குடிசை முக்கிய நிர்வாகிகள் ஜெய்சங்கர், பிரகாஷ், குணசேகர், குமார், மோகன் சத்யா, வெங்கடேசன், யுவராஜ், வினோத் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். இந்த கலைஞர் அறிவாலயத்தின் நிர்வாகிகள் சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலை நிகழ்ச்சிகளை உற்று நோக்கி கவனித்து ரசித்தார். இதனைத் தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரின் ஒரு மாத சம்பளத்திலிருந்து பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் நலத்திட்ட விழாவும், சிலம்பத்தில் உலக சாதனை படைத்த இரண்டு மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்கள் சாருமதி, முத்துலட்சுமி, சரண்யா, சந்தியா, ஷாஜிதா, தனுஸ், கிஷோர், லக்க்ஷிதா, அப்ரீன் ஆகியோருக்கு முதல்வர் பரிசு கவர் வழங்கி பாராட்டி வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் திருவுருவ சிலை திறந்து வைத்ததை தொடர்ந்து கலைஞர் அறிவாலய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நூலகத்தை பார்வையிட்டு கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் சூட்டினார். இதில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவல்துறை உயர் பதவி ஊழியர்கள், உயர் பதவி தடவியல் பாதுகாப்பு நிபுண காவலர்கள், மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவல் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படை குழுவினர் உட்பட பலர் பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.