கன்னியாகுமரி, ஜூலை 31 –
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு பிரகாஷ் நகரில் சரியான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் ஜோஸ் திவாகரிடம் சாலையை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கவுன்சிலர் ஜோஸ்திவாகர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜானகி இளங்கோ, செயல் அலுவலர் உஷா கிரேசி ஆகியோரிடம் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டி கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையின் அடிப்படையில் கான்கிரீட் சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் பொது நிதியிலிருந்து ரூபாய் 9.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை எட்வின்சன் தாங்கினார். லீலாவதி செல்லப்பன், பிரியா ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஜோஸ் திவாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கான்கிரீட் சாலை பணியை தொடங்கி வைத்தார். இதில் ஐரின் ஞானலெட், லீமா ரோஸ், லதா பாபு, சபா, நிஷா, சாம் பிளசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.