நாகர்கோவில், ஜூலை 26 –
குமரி மாவட்டத்தில் அஞ்சல் சேவைகள் சம்பந்தமான நிறுவனங்கள் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (மணிஆர்டர்) ஆகியவற்றை பதிவு செய்தல் மற்றும் பல்வேறு சிறுவகை சேவைகள் உள்பட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த இடங்களை வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் அஞ்சல் சேவைகளைப் பற்றிய அடிப்படை புரிதல் கொண்டிருத்தல் வேண்டும்.
ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Superintendent of Post Offices, Divisional Office, Kanniyakumari Division, 79, North Car Street, 2nd Floor, Nagercoil Head Post office, Nagercoil 629 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம்.
இதற்கான நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://utilities.cept.gov.in/DOP/VoewUploads.aspx?uid=10-ன் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வருகிற 04.08.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.