தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 07 –
அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான வாலிபால் போட்டிகள் அஞ்சுகிராமம் ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியினர் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்தனர்.
இதுபோல் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கால்வின், பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ பிரீதா, பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெகன் குமார், தீயணைப்புத்துறை வீரர் அசோக் குமார், கிராம நிர்வாக அலுவலர் சுதன், அருண், நந்துமாதவ், லிவின் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.