தென்தாமரை குளம், ஜூன் 30 –
ஈத்தாமொழி சிவா மருத்துவமனை மற்றும் அகஸ்தீஸ்வரம் தங்கவேல் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவம், மகளிர் நலன், கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அகஸ்தீஸ்வரம் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
முகாமிற்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வர் டி.சி. மகேஷ், அகஸ்தீஸ்வரம் தபால்நிலைய உதவி போஸ்ட் மாஸ்டர் சிவஞானசெல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற வன அதிகாரி ஆறுமுகப்பெருமாள், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், பூவியூர், சித்தர் கூடம் தலைவர் ஈசன், அகஸ்தீஸ்வரம் தங்கவேல், தமிழ்ச்சங்க செயலாளர் செல்வ சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் இலவச பொது மருத்துவம், மகளிர் நலன், கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ ஆலோசனை முகாம் மற்றும் அதி நவீன லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழுவினர் வழங்கினர். முகாமில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.