விளாத்திகுளம், செப்.23:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் AITUC-ன் 10-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டையொட்டி AITUC மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 கொடிக்கம்பங்களில் அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும் தோழர்கள் ஏற்றினர்.
மாநாட்டை தொடங்கி வைத்து AITUC மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் AITUC மாநில பொதுச் செயலாளர் லோகநாதன், பொருளாளர் பாலசிங்கம், கட்டிட சங்க மாநிலச் செயலாளர் சேது, CPI மாவட்டச் செயலாளர் கரும்பன், மாவட்ட உதவி செயலாளர்கள் பாலமுருகன், பாபு உள்ளிட்ட CPI மற்றும் AITUC நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பிச்சை, பெரியசாமி, பாக்கியராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



