கிருஷ்ணகிரி, ஜுன் 28 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் அடுத்து புங்கம் பட்டி கிராம ஊர் புற நூலக வளர்ச்சிக்காக பாரதி அறக்கட்டளை நிறுவனர் பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் விளங்காமுடி அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளை 70 பேர் உறுப்பினராக சேர்ந்தனர். மேலும் புங்கம்பட்டி ஊர்ப்புற நூலக வளர்ச்சிக்காக புரவலர் திட்டத்தின் கீழ் தன்னை ரூ. ஆயிரம் செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டார். மேலும் புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி ரூ. 1000 ஆயிரம் செலுத்தி புரவலராக தன்னை இணைத்துக் கொண்டார். நிகழ்சிக்கு தமிழ் ஆசிரியர் முத்து வரவேற்றார். விளங்காமுடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் முருகன், பழனிசாமி மற்றும் நூலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் முருகேசன் சிறப்புரை ஆற்றினார். புதிதாக சேர்ந்த நூலக உறுப்பினர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். முடிவில் நூலகர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.