திருப்பூர், செப்.12.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர் மாநகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் சாமளாபுரம் ஏரியில் விசர்ஜனம் செய்வது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காவல்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். ஊர்வலப் பாதைகளில் மின்கம்பிகளைச் சீரமைத்தல், தற்காலிக மின் இணைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், தீயணைப்பு வாகனங்கள், மீட்புப் படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஊர்வலம் செல்லும் சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சீரமைத்து போக்குவரத்து தடையின்றி நடைபெற அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.



